தேவையானவை:
- பூசணிக்காய் ஒரு பத்தை,
- பச்சை மிளகாய் 2,
- தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்,
- கடுகு அரை டீஸ்பூன்,
- கறிவேப்பிலை,
- மல்லித்தழை சிறிதளவு,
- உப்பு திட்டமாக,
- பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்.
செய்முறை: பூசணிக்காயைத் துருவி வாணலியில் சிறிது நீர் சேர்த்து வேகவிடவும். (பூசணிக்காய் நன்கு கல் மாதிரி இருக்க வேண்டும். கொழகொழவென்று இருந்தால் பச்சடி ருசிக்காது). மிளகாயை அரைத்துக்கொள்ளவும். காய் வெந்ததும் உப்பு, அரைத்த மிளகாய் சேர்த்துக் கொதிக்க விடவும். கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். காய் ஆறியதும் தேங்காய் துருவல், தயிர், பொடியாக நறுக்கிய மல்லித்தழை சேர்க்கவும்.