பூசணி விதை பாயசம்

தேவையானவை:

  • பூசணி விதை (தோல் நீக்கியது)  ஒரு கப்,
  • பால்  2 கப்,
  • பச்சரிசி  அரை டீஸ்பூன்,
  • சர்க்கரை  ஒரு கப்.

செய்முறை: பூசணி விதையை 3 அல்லது 4 மணி நேரம் ஊறவிடுங்கள். பிறகு, சொரசொரப்பான தரையில் மெதுவாகத் தேய்த்து அதன் தோலை நீக்குங்கள். அவற்றை நன்கு கழுவி விட்டு, சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதை பால், சர்க்கரை சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறுங்கள். 10 நிமிடம் கழித்து இறக்குங்கள். ஸ்பூனால் எடுத்துச் சாப்பிடும் பதத்தில், சற்றுக் கெட்டியாக இருக்கும். ஆனால், என்ன பாயசம் என்றே சொல்ல முடியாத அளவு பிரமாதமாக இருக்கும். விருந்துகளுக்கு ஏற்றது.