பூந்தி பாயசம்

தேவையானவை:

  • பால்  4 கப், பூந்தி (இனிப்பு, காரம், உப்பு இல்லாத வெறும் பூந்தி)  ஒரு கப்,
  • பொடியாக நறுக்கி நெய்யில் வறுத்த முந்திரிப்பருப்பு  2 டேபிள்ஸ்பூன்,
  • கண்டென்ஸ்டு மில்க்  அரை கப்,
  • சர்க்கரை  முக்கால் கப்,
  • ஏலக்காய்தூள்  அரை டீஸ்பூன்.

செய்முறை: பாலில் சர்க்கரை சேர்த்து, முக்கால் பாகம் ஆகும்வரை காய்ச்சுங்கள். அத்துடன் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். ஏலக்காய்தூள் சேருங்கள். பரிமாறுவதற்கு சற்று முன்பு, பூந்தியையும், நெய்யில் வறுத்த முந்திரி துண்டுகளையும் சேருங்கள். பிள்ளைகளுக்கு இந்த பாயசம் மிகவும் பிடிக்கும்.

குறிப்பு: பூந்தி செய்வதற்கு, கடலைமாவை தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொண்டு, காயும் எண்ணெயில், பூந்திக் கரண்டியைப் பிடித்துக்கொண்டு அதன் மேல் மாவை ஊற்றி கரண்டியை மெதுவாக தட்டுங்கள். விழும் பூந்தியை மொறுமொறுப்பாக வேகவிட்டு, அரித்தெடுங்கள்.