‘பேக்டு’ ரைஸ்

தேவையானவை:

  • பாசுமதி அரிசி  ஒரு கப்,
  • பட்டாணி, பொடியாக நறுக்கிய கேரட்,
  • பீன்ஸ் (மூன்றும் சேர்த்து)  அரை கப்,
  • பெரிய வெங்காயம்  1,
  • தக்காளி சாறு  அரை கப்,
  • மிளகாய்தூள்  ஒரு டீஸ்பூன்,
  • சீரகத்தூள்  அரை டீஸ்பூன்,
  • சீஸ் துருவல்  அரை கப்,
  • உப்பு  தேவையான அளவு.

தாளிக்க: பூண்டு  5 பல், எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன். செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். காய்கறிகளை உப்பு சேர்த்து வேகவைத்துக் கொள்ளுங்கள். பூண்டு, வெங்காயத்தை தோலுரித்து பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காயவைத்து, முதலில் பூண்டு சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேருங்கள். வெங்காயம் நன்கு வதங்கியதும், தக்காளி சாறு, மிளகாய்தூள், சீரகத்தூள், காய் சேர்த்து, பச்சை வாசனை போக கொதித்ததும் ஒரு டேபிள்ஸ்பூன் சீஸ் துருவல், சாதம் சேர்த்து நன்கு கிளறி ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு சற்று அழுத்திவிட்டு அதன் மேல் மீதமுள்ள சீஸ்துருவலை பரவினாற் போல தூவி ‘பேக்’ செய்யுங்கள். ஓவன் வசதி இல்லாதவர்கள் ஒரு கடாயில் பாதியளவு மணல் பரப்பி அதன் மீது இந்த சாதம் இருக்கும் பாத்திரத்தை வைத்து முப்பது நிமிடங்கள் கழித்து எடுக்கலாம்.