பொடி போட்ட தக்காளி குழம்பு

தேவையானவை:

பழுத்த தக்காளி   5,
புளி   எலுமிச்சை அளவு.
பூண்டு   10 பல்,
பச்சைமிளகாய்   2,
மிளகாய்தூள்   1 டீஸ்பூன்,
மஞ்சள்தூள்   கால்
டீஸ்பூன், உப்பு   தேவையான அளவு,

தாளிக்க:

  • கடுகு   அரை டீஸ்பூன்,
  • சீரகம்   கால் டீஸ்பூன்,
  • வெந்தயம்   அரை டீஸ்பூன்.

பொடித்துக்கொள்ள:

  • மிளகு   அரை டீஸ்பூன்,
  • சீரகம்   கால் டீஸ்பூன்,
  • தனியா   ஒரு உளுத்தம்பருப்பு   அரை டீஸ்பூன்,
  • வெந்தயம்   கால் டீஸ்பூன்,
  • கடுகு   கால் டீஸ்பூன்.

செய்முறை: புளியை 3 கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். பொடிக்க தந்த பொருட்களை வெறும் கடாயில் நன்கு சிவக்க வறுத்து, நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். பூண்டின் தோலை உரித்து நசுக்கிக்கொள்ளுங்கள். பச்சை மிளகாயை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். எண்ணையைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து பொன்னிறமாக வறுத்து, ஒன்றிரண்டாக நசுக்கிய பூண்டையும் சேருங்கள். பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து நன்றாக வதக்குங்கள். புளித்தண்ணீரை ஊற்றி மிளகாய்தூள், மஞ்சள்தூள் சேர்த்துப் போட்டு கொதித்ததும் புளி சேர்த்து வதக்குங்கள். 2, 3 நாட்களுக்கும்மேல் கெடாமலிருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X