தேவையானவை:
- கோதுமை மாவு ஒரு கப்,
- கடலை மாவு ஒரு கப்,
- உப்பு சுவைக்கேற்ப,
- தண்ணீர் தேவையான அளவு,
- தயிர் அரை கப்,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் ஒரு டீஸ்பூன்,
- சீரகம் ஒரு டீஸ்பூன்,
- கருஞ்சீரகம் கால் டீஸ்பூன்,
- ஓமம் கால் டீஸ்பூன்,
- நெய் அல்லது எண்ணெய் ஒரு டீஸ்பூன்,
- கரம் மசாலாதூள் கால் டீஸ்பூன்,
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: எல்லாப் பொருட்களையும் ஒன்றாகக் கலந்து பிசைந்து, ஒரு ஈரத்துணியில் சுற்றிவைக்கவும். சிறிது நேரம் கழித்து, பூரிகளாகத் தேய்த்துப் போட்டு பொரித்தெடுக்கவும்.