முட்டைகோஸ் பொரியல்

தேவையானவை:

  • முட்டை கோஸ்  கால் கிலோ,
  • இஞ்சி  ஒரு சின்ன துண்டு,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • பெரிய வெங்காயம்  1,
  • தேங்காய்த்துருவல்  2 டேபிள்ஸ்பூன்,
  • வரமிளகாய்  2.

தாளிக்க: கடுகு  அரை டீஸ்பூன், உளுத்தம்பருப்பு  2 டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிது, எண்ணெய்  3 டேபிள்ஸ்பூன்.

செய்முறை: கோஸைப் பொடியாக நறுக்கித் தண்ணீரில் போட்டு வேகவைக்கவும். கோஸ் வேகவைக்கும் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியைப் போட்டு விட்டால் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும். கோஸ் வெந்தததும் திட்டமாக உப்புப் போட்டு இறக்கித் தண்ணீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெயைச் சூடு செய்து கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, மிளகாயைக் கிள்ளிப் போட்டு வதக்கி, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும். கடைசியாக கோஸையும், தேங்காய் துருவலையும் சேர்த்துப் புரட்டி இறக்கவும்.