முளைகட்டிய பாசிப்பயறு பச்சடி

தேவையானவை:

  • முளைகட்டிய பாசிப்பயறு  அரை கப்,
  • தயிர்  ஒன்றே கால் கப்,
  • சின்ன வெங்காயம்  5 அல்லது 6,
  • பச்சை மிளகாய்  2,
  • தேங்காய் துருவல்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • கடுகு  அரை டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  2 சிட்டிகை,
  • மல்லித்தழை  ஒரு கைப்பிடி,
  • கறிவேப்பிலை  2 ஆர்க்கு.

செய்முறை: எண்ணெயில் கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வதக்கியவற்றை முளைத்த பயறில் கொட்டி தேங்காய் துருவல், உப்பு கலந்து வைக்கவும். பொடியாக நறுக்கிய மல்லித்தழை, தயிர் சேர்த்துப் பரிமாறவும். சத்தான இந்தப் பச்சடியை நோய் வாய்ப்பட்டு குணமானவர்களுக்குக் கொடுத்தால், சீக்கிரம் உடல் தேறும்.