தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரை எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு. டீஸ்பூன்,
பூரணத்துக்கு: முளைப்பயறு & முக்கால் கப், பனீர் துருவல் & 2 டேபிள்ஸ்பூன், பச்சை மிளகாய் & 2, பூண்டு (விருப்பப்பட்டால்) & 3 பல், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & 2 டீஸ்பூன்.
செய்முறை: முளைப்பயறை ஆவியில் வேகவைத்து எடுங்கள். ஆறியவுடன் கரகரப்பாக அரைத்தெடுங்கள். பூண்டு, பச்சை மிளகாய் இரண்டையும் சேர்த்து விழுதாக அரையுங்கள். எண்ணெயைக் காயவைத்து, சிறு தீயில் பூண்டு, மிளகாய் விழுதை வதக்குங்கள். பச்சை வாசனை போன பிறகு, முளைப்பயறு அரைத்த விழுது, பனீர் துருவல், உப்பு சேர்த்து கிளறி இறக்குங்கள்.
கோதுமை மாவை வழக்கம்போல பிசைந்து, சப்பாத்திகளாக திரட்டி, நடுவே முளைப்பயறு பூரணத்தை வைத்து, மேலே இன்னொரு சப்பாத்தி வைத்து, ஓரங்களை ஒட்டி எண்ணெய் விட்டு வேகவிடுங்கள்.