‘ராஜபோக’ பூரி

தேவையானவை:

  • மைதா  2 கப்,
  • இனிப்பு சேர்த்த கோவா  அரை கப்,
  • வெல்லம் (பொடித்தது)  3 டேபிள்ஸ்பூன்,
  • ஏலக்காய்தூள்  கால் டீஸ்பூன்,
  • முந்திரி, பாதாம், பிஸ்தா, வால்நட், உலர்திராட்சை (எல்லாம் சேர்த்துப் பொடித்தது)  2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு  ஒரு சிட்டிகை,
  • நெய்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • எண்ணெய்  பொரிக்க தேவை யான அளவு.

செய்முறை: மைதாவில் துளி உப்பு, தண்ணீர் சேர்த்து பிசைந்துகொள்ளவும். வாணலியில் சிறிது நெய்யைக் காயவைத்து, கோவா, பொடித்த பருப்புகள், வெல்லம், ஏலக்காய் எல்லாவற்றையும் போட்டுக் கிளறி வைக்கவும். மைதா மாவில் சிறு செப்புகளாக செய்து, பூரணத்தை ஸ்டஃப் செய்து, பூரிகளாகத் தேய்த்து, காயும் எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.

இதில் கலந்திருப்பவை எல்லாமே, சத்து நிறைந்த உணவுப் பொருட்கள் என்பதால், இதை வடநாட்டில் ‘ராஜபோக’ பூரி என்பார்கள்.