ரிப்பன் பக்கோடா

தேவையானவை:

  • பச்சரிசி ஒரு கப்,
  • பொட்டுக்கடலை அரை கப்,
  • உளுத்தம்பருப்பு ஒரு டேபிள்ஸ்பூன்,
  • பச்சை மிளகாய் விழுது 2 டீஸ்பூன் (அல்லது) மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
  • நெய் 2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு தேவையான அளவு,
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பை சிவக்க வறுத்து, அரிசி, பொட்டுக்கடலையுடன் சேர்த்து மிஷினில் மாவாக அரைத்துக்கொள்ளுங்கள். அரைத்த மாவை சலித்து, அதில் பச்சை மிளகாய் விழுது அல்லது மிளகாய்தூள், உப்பு, நெய், பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு பிசைந்து, ரிப்பன் பக்கோடா குழலில் போட்டு காயும் எண்ணெயில் பிழிந்து வேக விட்டெடுங்கள்.