...

லட்சா பரோட்டா

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய்&நெய் கலவை & தேவையான அளவு.

செய்முறை: கோதுமை மாவுடன், உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசையுங்கள். சிறிதளவு மாவெடுத்து பெரிய சப்பாத்தியாக திரட்டுங்கள். அதன் மேல் எண்ணெய்&நெய் கலவையைத் தடவுங்கள். பின்பு பாதியாக மடித்து, மீண்டும் எண்ணெய்&நெய் தடவி பாதியாக மடித்து திரட்டுங்கள். மீண்டும் மீண்டும் மடித்து, ஒவ்வொரு மடிப்பிலும் நெய் & எண்ணெய் தடவி (மாவு தொட்டுக் கொள்ளாமல்) திரட்டவேண்டும். தோசை தவாவை காயவைத்து திரட்டியதை போட்டு, இருபுறமும் திருப்பி விட்டு எண்ணெய் சேர்த்து நன்கு சுட்டெடுங்கள். சப்பாத்தியை மடித்து மடித்து தேய்ப்பதால், அடுக்கடுக்காக பிரிந்து, மிருதுவாக இருக்கும் இந்த லட்சா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.