தேவையானவை:
- சேமியா 1 கப்,
- எலுமிச்சம்பழச் சாறு 2 டேபிள்ஸ்பூன்,
- பச்சை மிளகாய் 1,
- இஞ்சி 1, பூண்டு,
- கறிவேப்பிலை சிறிது,
- பெருங்காயம் கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு தேவைக்கு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்,
- எண்ணெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்.
செய்முறை: சேமியாவை கொதிக்கும் நீரில் வேக வைத்து வடியுங்கள். பச்சை மிளகாய், இஞ்சியைப் பொடியாக நறுக்குங்கள். எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். அவை பொன்னிறமானவுடன் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள்தூள், பெருங்காயம் சேர்த்து கிளறி சேமியாவில் சேருங்கள். அத்துடன் எலுமிச்சம்பழச் சாறு, உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.