வல்லாரைப்பொடி

தேவையானவை:

  • வல்லாரை கீரை  3 கப்,
  • கடலைப்பருப்பு  கால் கப்,
  • உளுத்தம்பருப்பு  கால் கப்,
  • காய்ந்த மிளகாய்  8,
  • புளி  சிறு உருண்டை,
  • பெருங்காயம்  சிறிதளவு,
  • எண்ணெய்  வறுக்க.

செய்முறை: வல்லாரை கீரையை நன்றாக சுத்தம் செய்து ஈரம் போகக் காயவைக்கவும். பிறகு, வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, பருப்புகளை தனித்தனியாக வறுத்தெடுக்கவும். வல்லாரை கீரையை வெறும் வாணலியில் சிறு தீயில் வறுத்தெடுக்கவும். புளியையும் வெறும் வாணலியில் வறுக்கவும். ஆறியவுடன், முதலில் பருப்பு, மிளகாய், உப்பு, புளி.. ஆகியவற்றை ஒன்றாகப் பொடித்து, கடைசியாக வல்லாரை இலைகளையும் போட்டு பொடித்தெடுக்கவும்.

குறிப்பு: வல்லாரை, தூதுவளை போன்ற கீரைகளை வதக்காமல் வெயிலில் காயவைத்தும் உபயோகப்படுத்தலாம்.