வெள்ளரி விதை பாயசம்

தேவையானவை:

  • வெள்ளரி விதை (கடைகளில் கிடைக்கிறது)  அரை கப்,
  • பாதாம்பருப்பு  20,
  • பால்  3 கப்,
  • சர்க்கரை  ஒரு கப்,
  • முந்திரிப்பருப்பு,
  • கிஸ்மிஸ்  தேவைக்கேற்ப,
  • ஏலக்காய்தூள்  சிறிதளவு,
  • நெய்  சிறிதளவு.

செய்முறை: வெள்ளரி விதையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். பாதாம்பருப்பை தண்ணீரில் ஊறவைத்து தோலுரித்து எடுத்து, பிறகு இரண்டையும் மிக்ஸியில் பால் விட்டு மை போல அரைத்தெடுங்கள். அதனுடன் சிறிது நீர் சேர்த்து கொதிக்கவையுங்கள். நன்கு கொதித்து ஓரளவு கெட்டியானவுடன் அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவையுங்கள். பிறகு முந்திரிப்பருப்பு, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்து அதில் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததையும் போட்டு இறக்குங்கள். விருப்பப்பட்டால் குங்குமப்பூவை மேலே தூவிக்கொள்ளலாம். கோடையில் இப்பாயசத்தை அடிக்கடி செய்து பருகலாம். குளிர்ச்சி தரக்கூடியது.