...

வெஸ்டர்ன் ஸ்டைல் மிக்ஸட் வெஜிடபிள் பொரியல்

தேவையானவை:

  • பீன்ஸ்  50 கிராம்,
  • பீட்ரூட்  50 கிராம்,
  • கோஸ்  50 கிராம்,
  • கேரட்  50 கிராம்,
  • உருளைக்கிழங்கு  50 கிராம்,
  • பெரிய வெங்காயம்  1,
  • மிளகாய்த்தூள்  அரை டீஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு,
  • பிரெட் தூள்  ஒரு கைப்பிடி அளவு,
  • மல்லி இலை  சிறிதளவு.

தாளிக்க: கடுகு  கால் டீஸ்பூன், சோம்பு  அரை டீஸ்பூன், கறிவேப்பிலை  சிறிதளவு.

செய்முறை: காய்களை பொடியாக நறுக்கி வேக விடவும். எண்ணெயில் கடுகு, சோம்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெந்த காய்களைச் சேர்த்து உப்பு, மிளகாய்தூள் சேர்த்துப் பிரட்டவும். பிரெட் தூள் தூவி இறக்கி மல்லி இலை சேர்க்கவும்.

குறிப்பு: பிரெட் தூள் இல்லை எனில், கடலைமாவு சேர்க்கலாம். இதுவும் சப்பாத்திக்கு ஏற்ற டிஷ் தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.