தேவையானவை:
- குடமிளகாய் 2,
- கடலை மாவு ஒன்றேகால் கப்,
- அரிசி மாவு 1 டேபிள்ஸ்பூன்,
- மைதா மாவு 1 டேபிள்ஸ்பூன்,
- ஆப்ப சோடா ஒரு சிட்டிகை,
- மிளகாய்தூள் 1 டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
ஸ்டஃப் செய்ய:
- பெரிய வெங்காயம் 2,
- மல்லித்தழை சிறிதளவு,
- எலுமிச்சம்பழச் சாறு 1 டேபிள்ஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்.
செய்முறை: வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்குங்கள். அதனுடன் உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, சீரகம் சேர்த்து பிசறுங்கள். இதுதான் ஸ்டஃப் செய்வதற்கான கலவை.
பிறகு, குடமிளகாயைக் கழுவித் துடைத்து, உள்ளிருக்கும் விதை நீக்கி, நீளவாக்கில் பெரிய துண்டுகளாக நறுக்குங்கள். மாவுடன் பெருங்காயத்தூள், மிளகாய்தூள், ஆப்ப சோடா, உப்பு சேர்த்து தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள்.
எண்ணெயைக் காயவைத்து குடமிளகாய் துண்டுகளை, கரைத்த மாவில் நனைத்து, எண்ணெயில் பொரித்தெடுங்கள். வெந்ததும் எடுத்து, நடுவில் லேசாக கீறி, வெங்காயக் கலவையை அதனுள் அடைத்து சூடாகப் பரிமாறுங்கள்.