ஸ்டஃப்டு சில்லி பஜ்ஜி

தேவையானவை:

  • பஜ்ஜி மிளகாய்  6,
  • கடலை மாவு  முக்கால் கப்,
  • மிளகாய்தூள்  அரை டீஸ்பூன்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • ஆப்ப சோடா  அரை சிட்டிகை,
  • உப்பு  சுவைக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு.

ஸ்டஃப் செய்ய:

  • துருவிய வெள்ளரி  கால் கப்,
  • துருவிய வெங்காயம்  கால் கப்,
  • துருவிய தேங்காய்  1 டேபிள்ஸ்பூன்,
  • நறுக்கிய மல்லித்தழை  1 டேபிள்ஸ்பூன்,
  • முளைப்பயறு  1 டேபிள்ஸ்பூன்,
  • மல்லித்தழை  1 டேபிள்ஸ்பூன்,
  • எலுமிச்சம்பழச் சாறு  1 டேபிள்ஸ்பூன் (அல்லது) மாங்காய் தூள்  1 டீஸ்பூன்,
  • சீரகத்தூள்  1 டீஸ்பூன்.

செய்முறை: முதலில், ஸ்டஃப் செய்வதற்கான பொருட்கள் எல்லாவற்றையும் கலந்து பிசறிக்கொள்ளுங்கள். பிறகு, மிளகாய்களை கழுவி, லேசாக நீளவாக்கில் கீறி, உள்ளிருக்கும் விதைகளை கவனமாக நீக்குங்கள். பிசறி வைத்திருக்கும் காய்கறி கலவையை மிளகாயினுள் நிரப்புங்கள். கடலை மாவு, ஆப்ப சோடா, மிளகாய்தூள், பெருங்காயத்தூள், தேவையான தண்ணீர் சேர்த்து, இட்லிமாவு பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய்களை மாவில் போட்டெடுத்து, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள். (குறிப்பு: பஜ்ஜி மிளகாய் கிடைக்காதவர்கள், சற்று வெளிர் பச்சை நிறத்தில், பெரிய சைஸில் இருக்கு பச்சை மிளகாய்களை உபயோகிக்கலாம். அதில் விதையும் காரமும் குறைவாக இருக்கும்).