ஸ்டஃப்டு பருப்பு

தேவையானவை:

  • பாகற்காய் (சற்று சிறியதாக) கால் கிலோ,
  • துவரம்பருப்பு அரை கப், கடலைப்பருப்பு அரை கப்,
  • புளி எலுமிச்சை அளவு,
  • மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
  • சோம்பு ஒரு டீஸ்பூன்,
  • உப்பு தேவையான அளவு,
  • வெல்லத்தூள் 2 டீஸ்பூன்,
  • எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை: புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டுங்கள். கால் கப் புளித்தண்ணீரை எடுத்து வைத்துவிடுங்கள். பாகற்காயை கீறி, விதைகளை நீக்கிவிட்டு மீதமுள்ள புளித்தண்ணீரில் ஊறவையுங்கள். பருப்பு வகைகளை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைத்து, எடுத்து வைத்துள்ள புளித்தண்ணீர், சோம்பு, மிளகாய்தூள், வெல்லத்தூள், உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைத்தெடுங்கள். 8 டேபிள்ஸ்பூன் எண்ணெயைக் காயவைத்து, அரைத்த விழுதை சேர்த்து நன்கு கிளறுங்கள். இது வெந்து உதிரானதும் இறக்கிவைத்துக் கொள்ளுங்கள்.

புளித்தண்ணீரில் உள்ள பாகற்காயை எடுத்து அதனுள் பருப்பு கலவையை அடைத்து, ஒரு நூலால் பாகற்காயைக் கட்டுங்கள். எண்ணெயைக் காயவைத்து அதில் பாகற்காய், உப்பு சேர்த்து கிளறி மூடிவைத்து, அவ்வப்போது தண்ணீர் தெளித்து, சிறு தீயில் நன்கு வதக்கி எடுங்கள்.