ஸ்பெஷல் தக்காளி சட்னி

தேவையானவை:

  • நன்கு பழுத்த தக்காளி   3,
  • சின்ன வெங்காயம்   10,
  • பூண்டு   4 பல்,
  • புளி   சிறிய நெல்லிக்காய் அளவு,
  • உப்பு   தேவையான அளவு.

தாளிக்க:

  • கடுகு   ஒரு டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு   2 டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்   6,
  • பெருங்காயதூள்   அரை டீஸ்பூன்,
  • எண்ணெய்   ஒரு டேபிள்ஸ்பூன்.

செய்முறை: வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள். பூண்டை உரித்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயம் தாளித்து நன்றாக வறுபட்டு பொன்னிறமானதும், வெங்காயம், பூண்டு சேருங்கள். வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்குங்கள். கடைசியில் தக்காளி சேர்த்து தேவையான உப்பு, புளி சேர்த்து தக்காளி வெந்து, நன்றாக கரைந்ததும் இறக்கி ஆற வைத்து அரைத்து பரிமாறுங்கள். இட்லி, தோசைக்கு பொருத்தமான சட்னி.