ஸ்பைஸி ஃப்ரைடு ரைஸ்

தேவையானவை:

  • பாசுமதி அரிசி  ஒரு கப்,
  • வெங்காய தாள்  2 கொத்து,
  • சோயா சாஸ்  ஒரு டீஸ்பூன்,
  • சில்லி சாஸ்  ஒரு டீஸ்பூன்.

அரைக்க:

  • காய்ந்த மிளகாய்  6,
  • பூண்டு  4 பல்,
  • எண்ணெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • உப்பு  தேவையான அளவு.

செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். வெங்காய தாளில் உள்ள வெங்காயத்தை தனியே எடுத்து பொடியாக நறுக்குங்கள். தாளையும் பொடியாக நறுக்குங்கள். மிளகாயை கொதிக்கும் நீரில் 10 நிமிடம் ஊற வைத்து, உரித்த பூண்டுடன் சேர்த்து நைஸாக அரைத்தெடுங்கள். எண்ணெயைக் காயவைத்து அரைத்த விழுது சேர்த்து வதக்கி, பிறகு வெங்காயம் சேர்த்து மேலும் 5 நிமிடம் வதக்குங்கள். பின்னர் சாதம், சாஸ்கள், உப்பு, வெங்காய தாள் சேர்த்து நன்கு கிளறி பரிமாறுங்கள்.