தேவையானவை:
- பச்சரிசி ஒரு கைப்பிடி,
- துவரம்பருப்பு அரை கப்,
- வெல்லம் ஒன்றேகால் கப்,
- தேங்காய்ப்பால் 3 கப்,
- ஏலக்காய்தூள் அரை டீஸ்பூன்,
- முந்திரி 6, கிஸ்மிஸ் 10,
- தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) 2 டேபிள்ஸ்பூன்,
- நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: பருப்பையும், அரிசியையும் லேசாக வறுத்தெடுங்கள். 2 கப் நீர் சேர்த்து வேகவிட்டு, வேகவைத்த தண்ணீரோடு சேர்த்து மசித்துக்கொள்ளுங்கள். பிறகு வெல்லத்தை அரை கப் நீர் விட்டு அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டி, பருப்பில் சேருங்கள். இதனை சிறு தீயில் வைத்து நன்கு கிளறுங்கள். 10 நிமிடம் கிளறிய பிறகு தேங்காய்ப்பால் சேர்த்து இறக்கி, ஏலத்தூள் சேருங்கள். முந்திரி, கிஸ்மிஸ் நெய்யில் வறுத்துப் போடுங்கள். நெய்யில் தேங்காய் துண்டுகளை வறுத்து பாயசத்தில் கலந்து பரிமாறவும்.
துவரம்பருப்பில் சாம்பார், கூட்டு மட்டுமல்ல, ‘சுவையான பாயசமும் பண்ண முடியும்’ என்று நிரூபித்து அனைவரையும் அசத்துங்கள்.