தேவையானவை:
- உருளைக்கிழங்கு கால் கிலோ,
- அரைக்கீரை ஒரு கைப்பிடி,
- பச்சை மிளகாய் 4,
- சின்ன வெங்காயம் 10,
- தேங்காய்ப்பால் அரை கப்,
- மிளகாய்தூள் கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- உப்பு,
- எண்ணெய் தலா தேவையான அளவு,
- கடுகு, உளுத்தம்பருப்பு தலா அரை டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் நீக்கி, உதிர்த்துக்கொள்ளுங்கள். அரைக்கீரையைக் கழுவி, பொடியாக நறுக்குங்கள். வெங்காயம், பச்சை மிளகாயையும் பொடியாக நறுக்குங்கள். கடாயில் கால் கப் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்கி, கீரையைப் போட்டு மிளகாய்தூள், உப்பு போட்டு கிளறி மூடிவையுங்கள். கீரை வெந்தபிறகு, உருளைக்கிழங்கைப் போட்டு, தேங்காய்ப்பால் விட்டு, சுருளக் கிளறுங்கள். தீயைக் குறையுங்கள், எண்ணெய் போதவில்லை என்றால், இன்னும் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி , சிவக்கக் கிளறி இறக்குங்கள்.