தேவையானவை:
- ஆப்பிள் 1,
- கடலை மாவு 1 கப்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- மிளகாய்தூள் (விருப்பமானால்) 1 டீஸ்பூன்,
- ஆப்ப சோடா சிட்டிகை,
- உப்பு சுவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: ஆப்பிளை கழுவி நீளவாக்கில் மெல்லிய துண்டுகளாக நறுக்கி விதை நீக்குங்கள். மாவுடன், மஞ்சள்தூள், உப்பு, ஆப்ப சோடா தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதத்தில் கரையுங்கள். எண்ணெயை காய வைத்து, ஆப்பிள் துண்டுகளை மாவில் நனைத்தெடுத்து எண்ணெயில் போட்டு நன்கு வேகவிட்டெடுங்கள்