தேவையானவை:
- பால் 4 கப், சர்க்கரை ஒரு கப்,
- இனிப்பு இல்லாத கோவா கால் கப் (இனிப்பு உள்ள பால்கோவா என்றாலும் பரவாயில்லை), ஆப்பிள் ஒன்றரை பழம், பச்சை நிற ஃபுட் கலர் (விருப்பப்பட்டால்) ஒரு சிட்டிகை,
- நெய் 2 டேபிள்ஸ்பூன்,
- கண்டென்ஸ்டு மில்க் (விருப்பப்பட்டால்) கால் கப்,
- வெனிலா எஸன்ஸ் ஒரு சொட்டு.
செய்முறை: ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்குங்கள். நெய் சேர்த்து ஆப்பிள் துண்டுகளை லேசாக வதக்குங்கள். கோவாவை உதிர்த்துக்கொள்ளுங்கள். பாலை நன்கு காய்ச்சி, அதனுடன் உதிர்த்த கோவா, கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடுங்கள். ஃபுட் கலரையும், வதக்கிய ஆப்பிள் துண்டுகளை சேர்த்து, முக்கால் பாகமாக ஆகும் வரை நன்கு கொதிக்கவிட்டு இறக்குங்கள். சற்று ஆறியதும், வெனிலா எஸன்ஸ் சேர்த்துக் கலக்கிப் பரிமாறுங்கள். வெகு சுவையாக இருக்கும் இந்தப் பாயசம்.