...

ஆலு சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரை எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு.டீஸ்பூன்,

பூரணத்துக்கு: வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு & ஒன்றரை கப், சீரகத்தூள் & ஒரு டீஸ்பூன், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், தனியா தூள் & அரை டீஸ்பூன், மாங்காய்தூள் & ஒன்றரை டீஸ்பூன், மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் & 2 டீஸ்பூன், உப்பு & தேவையான அளவு.

செய்முறை: பூரணத்துக்குக் கொடுத்துள்ள பொருட்கள் எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்துப் பிசைந்துகொள்ளுங்கள் (அடுப்பில் வைத்துக் கிளறத் தேவையில்லை).

கோதுமை மாவை, நெய், உப்பு சேர்த்துப் பிசைந்து, கிண்ணங்களாக செய்து நடுவே பூரணம் வைத்து சப்பாத்திகளாக திரட்டுங்கள். தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் & நெய் சேர்த்து வேகவிடுங்கள். உப்பு, புளிப்பு, உறைப்பு என மூன்று சுவையும் சேர்ந்து, சூப்பராக இருக்கும் இந்த சப்பாத்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.