தேவையானவை:
- இஞ்சி & 100 கிராம்,
- காய்ந்த மிளகாய் & ஏழெட்டு,
- புளி & எலுமிச்சம்பழ அளவு,
- மண்டை வெல்லத்தூள் & அரைகப்,
- நல்லெண்ணெய் & முக்கால் கப்.
செய்முறை: இஞ்சியைக் கழுவி தோல் சீவி, வட்ட வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் காய்ந்த மிளகாயை நன்கு வறுத்துக் கொள்ளவும். இஞ்சியை வதக்கிக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், புளி, உப்புடன், இஞ்சி சேர்த்துக் கொஞ்சமாக தண்ணீர் விட்டு வழுவழுவென அரைக்கவும். தாராளமாக எண்ணெய் ஊற்றி, கடுகு தாளித்து, அரைத்த இஞ்சிக் கலவை, சீவிய வெல்லத்தூள் போட்டுக் கிளறி இறக்கவும். தயிர் சாதத்துக்குத் தொட்டுக்கொள்ளவும், இட்லி, தோசை, சப்பாத்தி, பிரெட்டுக்கு சேர்த்துச் சாப்பிடவும் சரியான ஜோடி, இந்த பச்சடி.
இந்தப் பச்சடி ஜீரணத்துக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தி குறைவாக இருந்து உணவு செரிக்காமல் சிரமப்படுகிறவர்கள், வாரம் ஒருமுறை இதை செய்து சாப்பிடலாம்.