தேவையானவை:
இட்லிகள் – 10,
இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
கார்ன்ஃப்ளார் – ஒரு டேபிள்ஸ்பூன்,
கடலை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகாய்தூள் – ஒரு டீஸ்பூன்,
கரம் மசாலாதூள் – அரை டீஸ்பூன்,
சீரகத்தூள் – அரை டீஸ்பூன்,
ஆரஞ்சு ரெட் கலர் – ஒரு சிட்டிகை,
உப்பு – சுவைக்கேற்ப, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை: இட்லிகளை விரல் நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள். அதனுடன் இஞ்சி-பூண்டு விழுது, கார்ன்ஃப்ளார், கடலைமாவு, மிளகாய்தூள், கரம் மசாலாதூள், சீரகத்தூள், ரெட் கலர், உப்பு சேர்த்து, அதனுடன் சிறிது தண்ணீரும் சேர்த்து நன்கு பிசறிக்கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கலந்து வைத்துள்ள இட்லிகளை ஐந்தாறாகப் போட்டுப் பொரித்தெடுங்கள். குழந்தைகளைக் கவர்ந்திழுக்கும் ஸ்நாக்ஸ் என்பதால், மீந்துபோன இட்லிகளைக் கூட இப்படி மஞ்சூரியன்களாக செய்து கொடுக்கலாம். குஷியாகச் சாப்பிடுவார்கள்.
குறிப்பு: எண்ணெய் நன்கு காய்ந்திருக்க வேண்டும். இல்லை யென்றால், எண்ணெயைக் குடித்துவிட்டு, மஞ்சூரியன் ‘சதசத’வென ஆகிவிடும்.