தேவையானவை:
- கடலைப்பருப்பு அரை கப்,
- இளம் தேங்காய் (நறுக்கியது) ஒரு கப்,
- பச்சைமிளகாய் 3,
- பெரிய வெங்காயம் 1,
- சீரகம் 1 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது,
- நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: கடலைப்பருப்பை குழையாமல், அரை அவியலாக வேகவையுங்கள். வெந்த பருப்புடன், பொடியாக நறுக்கிய தேங்காய், வெங்காயம், கீறிய பச்சைமிளகாய், உப்பு, தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடுங்கள். பின்பு சீரகத்தை இரண்டு கைகளாலும் தேய்த்து அதில் போட்டு, கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, நெய் ஊற்றி சேர்த்து கலந்து இறக்குங்கள்.
குறிப்பு: தேங்காய் முற்றலாக இல்லாமல், நன்கு இளசாக இருந்தால்தான் இந்தக் கூட்டு சுவைக்கும்.