தேவையானவை:
- உருளைக்கிழங்கு 2,
- பால் 3 கப், சர்க்கரை ஒரு கப்,
- கேசரி பவுடர் ஒரு சிட்டிகை,
- முந்திரி, கிஸ்மிஸ்,
- நெய் தலா சிறிதளவு,
- ஏலக்காய்தூள்,
- குங்குமப்பூ தலா ஒரு சிட்டிகை.
செய்முறை: உருளைக்கிழங்கை தோலுடன் நன்கு கழுவி, வேகவைத்து தோல் நீக்கி நன்கு மசித்துக்கொள்ளுங்கள். பிறகு அதனுடன் பாலும், சர்க்கரையும் சேர்த்து நன்கு கொதிக்கவிடுங்கள். நன்கு கொதித்தவுடன் சிறிதாக நறுக்கிய முந்திரி, கிஸ்மிஸ் ஆகியவற்றை நெய்யில் வறுத்துப் போடுங்கள். ஏலக்காய் பொடித்ததைப் போட்டு, கேசரி பவுடர் சிறிது சேர்த்து கிளறுங்கள். இதமான சூட்டில் பரிமாறுங்கள்.