தேவையானவை: பெரிய உருளைக்கிழங்கு – 10, பெரிய வெங்காயம் – 2, மிளகாய்தூள் – 3 டீஸ்பூன், தூள் உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – இரண்டரை கப்.
வெளிமாவு தயாரிக்க: பச்சரிசி – 1 கப், உளுத்தம் பருப்பு – முக்கால் கப், உப்பு – தேவைக் கேற்ப.
செய்முறை: பச்சரிசி + உளுத்தம்பருப்பை கழுவி 2 மணி நேரம் ஊறவைத்து ஒன்றாக சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு ஆட்டி உப்பு சேர்க்கவும். உருளைக் கிழங்கை வேகவைத்து தோலுரித்து, நன்கு பிசைந்து அதில் மிளகாய்தூள், உப்பு கலந்து பிசையவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை வதக்கி அதில் உருளை மசாலாவையும் சேர்த்து சூடு வரக் கிளறி இறக்கி ஆறவிடவும். ஆறியதும் சிறு உருண்டை களாக உருட்டிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயைக் காய வைத்து, உருட்டிய உருண்டை களை ஆட்டிவைத்துள்ள மாவில் போட்டு எடுத்து எண்ணெயில் சிவக்க பொரித் தெடுக்கவும். இது அருமையான மாலை நேரச் சிற்றுண்டி. தேங்காய் சட்னி இதற்கு சூப்பர் காம்பினேஷன்.