தேவையானவை:
- உருளைக்கிழங்கு ஒன்று அல்லது இரண்டு,
- பச்சை மிளகாய் 2, கடுகு கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை, மல்லித்தழை தலா சிறிதளவு,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- கெட்டித் தயிர் ஒன்றரை கப், உப்பு திட்டமாக.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் உரித்து மசித்துக் கொள்ளவும். தயிரில் உப்புப் போட்டு உருளைக்கிழங்கை சேர்க்கவும். எண்ணெயில் கடுகு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். மல்லித்தழையைப் பொடியாக நறுக்கிச் சேர்க்கவும். மிகவும் ருசியாக இருக்கும் இந்த ராய்த்தா.