...

எள்மிளகாய்ப்பொடி

தேவையானவை:

  • காய்ந்த மிளகாய்  10,
  • கடுகு  ஒரு டீஸ்பூன்,
  • உளுத்தம்பருப்பு  அரை கப்,
  • கடலைப்பருப்பு  அரை கப்,
  • பெருங்காயம்  சிறிதளவு,
  • எள்  கால் கப்,
  • உப்பு  தேவையான அளவு.

செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயம், காய்ந்த மிளகாய் ஆகியவற்றை சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக்கொள்ளவும். எள்ளை ஊற வைத்து, தோல் போக தேய்த்து வெறும் வாணலியில் வறுக்கவும். வறுத்த பொருள்களோடு உப்பு சேர்த்து நறநறப்பாக அரைக்கவும். இட்லி, தோசைக்குத் தொட்டுக் கொள்ள சுவையாகவும், மணமாகவும் இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.