தேவையானவை:
- கடலைப்பருப்பு அரை கப்,
- சர்க்கரை அரை கப்,
- தேங்காய் துருவல் அரை கப்,
- ஏலக்காய் தூள் அரை டீஸ்பூன்,
- நெய் 2 டீஸ்பூன்.
செய்முறை: கடலப்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, குழைந்துவிடாமல் வேகவைத்து, தண்ணீரை வடித்துக்கொள்ளுங்கள். அடுப்பில் நெய்யைக் காயவைத்து, கடலைப்பருப்பு, தேங்காய், சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.