தேவையானவை:
- கோதுமை மாவு ஒரு கப்,
- மைதா மாவு ஒரு கப்,
- உப்பு ஒரு சிட்டிகை,
- கடலைப் பருப்பு கால் கப்,
- தேங்காய் துருவல் 2 டேபிள்ஸ்பூன்,
- பொடித்த சர்க்கரை 6 டேபிள் ஸ்பூன் அல்லது பொடித்த வெல்லம் அரை கப்,
- ஏலக்காய்தூள் கால் டீஸ்பூன்,
- நெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு.
செய்முறை: கோதுமை மாவு, மைதா மாவு இரண்டையும் கலந்து துளி உப்பு, தண்ணீர் சேர்த்துப் பிசையவும். கடலைப்பருப்பை வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். வாணலியில் நெய்யைச் சூடாக்கி, கடலைப்பருப்பு, பொடித்த சர்க்கரை, தேங்காய் துருவல், ஏலக்காய் தூள் சேர்த்துக் கிளறி இறக்கவும். மாவை சிறு உருண்டைகளாக்கி, உள்ளே பூரணம் வைத்து, மூடி, பூரிகளாகத் தேய்த்து பொரித் தெடுக்கவும்.