தேவையானவை:
- கோதுமை மாவு 2 கப்,
- நெய் 2 டீஸ்பூன்,
- உப்பு,
- எண்ணெய் தேவையான அளவு.
பூரணத்துக்கு:
- கடலை மாவு அரை கப்,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- கரம்மசாலாதூள் அரை டீஸ்பூன்,
- லெமன் சால்ட் கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்.
செய்முறை: கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து சப்பாத்திமாவு போல் பிசைந்துகொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து கடலைமாவு சேர்த்து வறுத்துக்கொள்ளுங்கள். மாவு நன்கு வறுபட்டு, வாசனை வந்ததும் பூரணத்துக்கான மற்ற பொருட்களையும் சேர்த்து சிறிது வறுத்து இறக்குங்கள். கோதுமை மாவிலிருந்து சிறிது எடுத்து கிண்ணம் போல் செய்து, கடலை மாவு பூரணத்தை சிறிது வைத்து மூடி, அதை உருட்டி சப்பாத்தி போல திரட்டி தோசைக்கல்லில் சுட்டெடுங்கள். இந்த சப்பாத்தியை நன்கு அழுத்தி, அழுத்திவிட்டு முறுகலாக சுட்டு எடுக்கவேண்டும். அப்போதுதான் ருசியே!