தேவையானவை: நிலக்கடலை & அரை கப், உருளைக்கிழங்கு & 1 (பெரியது), பிரெட் & 2 (அ) 3 ஸ்லைஸ்கள், ரஸ்க் (அ) பிஸ்கட் தூள் & ஒரு கப், பச்சை மிளகாய் & 4 துண்டு, இஞ்சி & ஒரு துண்டு, மல்லித்தழை & ஒரு கைப்பிடி, எண்ணெய் & தேவையான அளவு, உப்பு & சுவைக்கேற்ப.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கிவிட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் ஒரு நிமிடம் நனைத்து.. பிறகு, தண்ணீரை ஒட்ட பிழியவும். மிக்ஸியில் இஞ்சி, மல்லித்தழை, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு, நீர் விடாமல் கரகரவென்று அரைத்துக் கொள்ளவும். நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, விருப்பமான வடிவத்தில் சிறிய அளவில் செய்து, ரஸ்க் அல்லது பிஸ்கட் தூளில் பிரட்டி எண்ணெயில் நிதானமாக பொரித்து எடுக்கவும். தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.