தேவையானவை:
- பாசுமதி அரிசி ஒரு கப்,
- தக்காளி 3,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- சீரகம் கால் டீஸ்பூன்,
- நெய் ஒன்றரை டேபிள்ஸ்பூன்.
‘கட்டா’ செய்ய:
- கடலைமாவு அரை கப்,
- எண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன்,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- சீரகத்தூள் அரை டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: அரிசியை உப்பு சேர்த்து உதிராக வடித்துக்கொள்ளுங்கள். தக்காளியைப் பொடியாக நறுக்குங்கள். கட்டா செய்யக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்துக் கலந்து, தேவையான தண்ணீர் சேர்த்து கெட்டியாகப் பிசையுங்கள். பிசைந்த மாவிலிருந்து சிறிது சிறிதாக எடுத்து, கயிறு போல நீளவாக்கில் கனமாக உருட்டி வைத்துக்கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் 3 கப் தண்ணீரைக் கொதிக்க வைத்து, நன்கு கொதிக்கும்போது உருட்டிய கட்டாக்களைப் போட்டு, நடுத்தரத் தீயில் 15 நிமிடம் வேகவிடுங்கள் (20 நிமிடம் கூட வேகவிடலாம்). வெந்ததும் நீரை வடித்துவிட்டு, ஆறவிடுங்கள். ஆறிய கட்டாக்களை, சிறு துண்டுகளாக நறுக்கிவைத்துக்கொள்ளுங்கள்.
நெய்யைக் காயவைத்து கடுகு, சீரகம் தாளித்து, நறுக்கிய கட்டா துண்டுகளைச் சேருங்கள். 3 நிமிடம் நன்கு வதக்கி, தக்காளி சேருங்கள். அத்துடன் மிளகாய்தூள், மஞ்சள்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்து வதக்கி, சாதத்தைச் சேர்த்துக் கலந்து பரிமாறவும். ருசியோ ருசி என்பார்கள் சுவைத்தவர்கள்! குறிப்பு: கட்டாக்களை தண்ணீரில் வேகவிடாமல், எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.