கலவை பருப்பு வடை

தேவையானவை:

  • உளுத்தம்பருப்பு  அரை கப்,
  • கடலைப்பருப்பு  அரை கப்,
  • துவரம்பருப்பு  கால் கப்,
  • பச்சரிசி  2 டீஸ்பூன்,
  • பச்சை மிளகாய்  2,
  • இஞ்சி  1 துண்டு,
  • சீரகம்  1 டீஸ்பூன்,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • எண்ணெய்  தேவையான அளவு,
  • கறிவேப்பிலை  சிறிது.

செய்முறை: பருப்புகளையும் அரிசியையும் ஒன்றாக ஒரு மணிநேரம் ஊற போடுங்கள். தண்ணீரை நன்றாக வடித்து விட்டு கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, சீரகம், பெருங்காயம், உப்பு, சேர்த்து நன்கு பிசைந்து காயும் எண்ணெயில் சிறு வடைகளாக தட்டி போட்டு வெந்ததும் எடுத்துப் பரிமாறுங்கள். சூடாக சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.