தேவையானவை:
- கார்ன்ஃப்ளேக்ஸ் ஒரு கப்,
- பால் 2 கப்,
- சர்க்கரை முக்கால் கப்,
- நெய் கால் கப்,
- முந்திரிப்பருப்பு தேவைக்கேற்ப,
- ஏலக்காய் பொடித்தது சிறிதளவு.
செய்முறை: கார்ன்ஃப்ளேக்ஸை சிறிது நெய் விட்டு வறுத்தெடுங்கள். பிறகு முக்கால் கப் கார்ன்ஃப்ளேக்ஸை மிக்ஸியில் லேசாக ஒரு திரிப்பு திரிக்க வேண்டும். (கவனிக்கவும்: மிகவும் நைஸாக பொடித்துவிடக்கூடாது). அதை பால் ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்கவிடுங்கள். ஓரளவு கெட்டியானவுடன் முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்து, பொடித்த ஏலத்தையும் அதனுடன் போட்டு இறக்குங்கள். பரிமாறும்போது மீதமுள்ள கால் கப் கார்ன்ஃப்ளேக்ஸை மேலே தூவிக் கொடுக்கலாம்.
கார்ன்ஃப்ளேக்ஸ§டன் பால், நெய், முந்திரிப்பருப்பு.. எல்லாம் சேர்வதால் குழந்தைகளுக்கு சத்தான, ஆரோக்கியமான, எளிதான பாயசம் இது.