தேவையானவை: கோதுமை மாவு & 2 கப், நெய் & ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு & அரை எண்ணெய் & நெய் கலவை & தேவையான அளவு. டீஸ்பூன்,
பூரணத்துக்கு: சோளம் (வேகவைத்து உதிர்த்தது) & ஒரு கப், பச்சை மிளகாய் & 2, பூண்டு & 2 பல், உப்பு & தேவையான அளவு, எண்ணெய் & 2 டீஸ்பூன்.
செய்முறை: கோதுமை மாவை நெய், உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள். வேகவைத்த சோளத்தை மிக்ஸியில் சற்று கரகரப்பாக அரைத்துக்கொள்ளுங்கள். பூண்டு, மிளகாய் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காயவைத்து, மிளகாய், பூண்டு விழுதைப் போட்டு வதக்கி, அரைத்த சோளம், உப்பு சேர்த்து கிளறுங்கள். இறக்கி ஆறவைத்த, இந்தப் பூரணத்தை நடுவே வைத்து சப்பாத்திகளாக திரட்டி, எண்ணெய்&நெய் சேர்த்து வேகவைத்தெடுங்கள்.