தேவையானவை:
- உருளைக்கிழங்கு கால் கிலோ,
- காலிஃப்ளவர் 1 (சிறியது),
- சோம்பு அரை ஸ்பூன்,
- பட்டை 1 துண்டு,
- பெரிய வெங்காயம் 1,
- மிளகாய்தூள் முக்கால் டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு 2 டீஸ்பூன்,
- கறிவேப்பிலை,
- மல்லி இலை தலா சிறிதளவு,
- எண்ணெய் 5 டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள்பொடி கால் டீஸ்பூன்.
செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்துத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். காலிஃப்ளவரை அது மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி உப்புப் போட்டு வைக்கவும். 10 நிமிடம் கழித்து எடுத்து, தனித் தனிப்பூவாகப் பிய்த்து எடுத்து வேகவிடவும். வெங்காயத்தை உரித்து சதுர துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். காலிஃப்ளவர், உருளைக்கிழங்கு துண்டுகள், உப்பு, மஞ்சள்பொடி, மிளகாய்தூள் சேர்த்து வதக்கவும். சோம்பு, பட்டையை வறுத்து நுμக்கிச் சேர்த்துப் பிரட்டி இறக்கி, மல்லி இலை சேர்க்கவும்.