தேவையானவை:
- காலிஃப்ளவர் 1,
- கடலை மாவு 1 கப்,
- அரிசி மாவு 1 டீஸ்பூன்,
- கார்ன்ஃப்ளார் 2 டீஸ்பூன்,
- இஞ்சி,
- பூண்டு விழுது 1 டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- மிளகாய் தூள் 1 டீஸ்பூன்,
- உப்பு சுவைக்கேற்ப.
செய்முறை: மாவுடன் கார்ன்ஃப்ளார், இஞ்சி, பூண்டு விழுது, மிளகாய்தூள், உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து இட்லி மாவை விட சற்றுக் கெட்டியான பதத்தில் கரைத்துக்கொள்ளுங்கள். காலிஃப்ளவரை சிறு துண்டுகளாக்கி, அலசி, உப்பு கலந்த கொதிக்கும் நீரில் இரண்டு நிமிடம் போட்டெடுங்கள். எண்ணெயைக் காயவையுங்கள். காலிஃப்ளவரை சிறிது சிறிதாக மாவில் போட்டெடுத்து எண்ணெயில் தூவினாற்போல் போட்டு, வேகவிட்டு எடுங்கள்.