தேவையானவை:
- காலிஃப்ளவர் (நடுத்தரமானது) 1,
- குழம்பு மசாலா தூள் ஒன்றரை டீஸ்பூன்,
- இஞ்சி ஒரு சிறு துண்டு, பூண்டு 4 பல்,
- பச்சை மிளகாய் 1,
- கார்ன்ஃப்ளார் ஒரு அரிசிமாவு அரை டீஸ்பூன்,
- உப்பு கால் டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு,
- எலுமிச்சம்பழச் சாறு அரை டீஸ்பூன்.
செய்முறை: காலிஃப்ளவரை சிறிய பூக்களாகப் பிரித்தெடுத்து, உப்புப் போட்ட வெந்நீரில் சிறிது நேரம் போட்டுவையுங்கள். இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு ஆகியவற்றை பொடியாக நறுக்குங்கள். மசாலாதூள், கார்ன்ஃப்ளார், அரிசி மாவு, எலுமிச்சம்பழச் சாறு, உப்பு, நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு.. எல்லாவற்றையும் ஒன்றாகச் சேர்த்து கெட்டியாகப் பிசையுங்கள். வெந்நீரில் போட்ட காலிஃப்ளவர் துண்டுகளை இந்தக் கலவையில் போட்டுப் பிசறி, எண்ணெயில் போட்டுப் பொரித்தெடுங்கள்.