தேவையானவை:
- சேமியா 1 கப்,
- கீரை (நறுக்கியது ) 1 கப்,
- உருளைக்கிழங்கு 2,
- பிரெட் 2 ஸ்லைஸ்,
- மைதா 2 டேபிள்ஸ்பூன்,
- இஞ்சி, பூண்டு,
- பச்சை மிளகாய் விழுது ஒன்றரை டீஸ்பூன்,
- மல்லித்தழை சிறிது,
- எலுமிச்சம்பழச் சாறு சிறிதளவு,
- உப்பு தேவைக்கு,
- மைதா அரை கப்,
- பிரெட் தூள் தேவைக்கு ஏற்ப,
- எண்ணெய் தேவைக்கு.
செய்முறை:
கீரையை நன்கு அலசிப் பிழிந்துகொள்ளுங்கள். உருளைக்கிழங்கை வேக வைத்து தோலுரித்து மசித்துக்கொள்ளுங்கள். சேமியாவை கொதிக்கும் நீரில் வேக வைத்து வடித்துக்கொள்ளுங்கள். மைதா, பிரெட் தூள், எண்ணெய் நீங்கலாக மற்றவற்றை ஒன்றாக சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள். தேவையான வடிவங்களில் கட்லெட்டுகளாக செய்து கொள்ளுங்கள். மைதாவை தோசை மாவு பதத்தில் கரைத்து, அதில் கட்லெட்டுகளை ஒவ்வொன்றாக நனைத்து எடுத்து, பிரெட் தூளில் புரட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள். சூப்பர் சுவையுடன் இருக்கும் இந்த கீரை சேமியா கட்லெட்.