தேவையானவை:
- உளுத்தம்பருப்பு 1 கப்,
- கடலைப்பருப்பு கால் கப்,
- அரைக்கீரை (அ) சிறுகீரை (அ) முளைக்கீரை 1 கட்டு,
- பெரிய வெங்காயம் 1,
- பச்சை மிளகாய் 2,
- இஞ்சி 1 துண்டு,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை: உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பை ஒரு மணிநேரம் ஊற விடுங்கள். கீரை நன்கு அலசிய பின் மிகவும் பொடியாக நறுக்குங்கள். பருப்பு ஊறிய பிறகு, தண்ணீரை நன்கு வடியுங்கள். பின்னர் மிளகாய், இஞ்சி, சீரகம் சேர்த்து கரகரப்பாக அரைத்தெடுங்கள். அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீரை, உப்பு சேர்த்து நன்கு பிசையுங்கள். எண்ணெயைக் காய வைத்து சற்று மெல்லிய வடைகளாக தட்டி, காயும் எண்ணெயில் எண்ணெய் கொள்ளுமளவு போட்டு, நடுத்தரத் தீயில் நன்கு வேக விட்டெடுங்கள்.