தேவையானவை:
- புழுங்கலரிசி 1 கப்,
- உளுத்தம்பருப்பு 1 கைப்பிடி,
- மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) அரை கப்,
- மிளகு (உடைத்தது) அரை டீஸ்பூன்,
- இஞ்சி (துருவியது) 1 டீஸ்பூன்,
- உப்பு தேவைக்கேற்ப,
- எண்ணெய் தேவையான அளவு.
தாளிக்க: சீரகம் அரை டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன்.
செய்முறை: அரிசி, உளுத்தம்பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து, ஆட்டவும். மல்லித்தழையை பொடியாக நறுக்கவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய்விட்டு, சூடானதும் தாளிப்பவற்றை போட்டு தாளித்து, இஞ்சியை சேர்த்து வதக்கவும். அத்துடன் ஆட்டிய மாவு, உப்பு, மல்லித்தழை, தாளித்தவை ஆகியவற்றை ஒன்று சேர்த்து கலந்து ரவா தோசைபோல் ஊற்றி இருபுறமும் மொறுமொறுப்பாக வெந்ததும் எடுத்து தேங்காய்ச் சட்னியுடன் பரிமாறவும்.