தேவையானவை:
- கொத்தவரங்காய் கால் கிலோ,
- புளி ஒரு சுளை,
- மிளகாய்தூள் அரை டீஸ்பூன்,
- உப்பு தேவையான அளவு,
- கடுகு, உளுத்தம்பருப்பு தலா (தாளிப்பதற்கு) தேவையான அளவு.
செய்முறை: புளியை தண்ணீரில் நனைத்து வைக்கவும். கொத்தவரங்காயை நீளத் துண்டுகளாக நறுக்கி லேசாக வதக்கி, குக்கரில் 3 விசில் வரை வேக விடவும். வாணலியில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து காயை வதக்கவும். காய் கொஞ்சம் வதங்கியதும், உப்பு, மிளகாய்தூள் சேர்த்துப் பிரட்டி, புளியும் கொஞ்சம் கரைத்து விடவும். காய் நன்கு வதங்கியதும் இறக்கவும்.