தேவையானவை:
- சீரகம் 2 டேபிள் ஸ்பூன்,
- மிளகு 2 டேபிள்ஸ்பூன்,
- பெருங்காயம் சிறிதளவு,
- உப்பு தேவையான அளவு.
செய்முறை: சீரகம், மிளகு, உப்பு இவற்றை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து வைத்துக் கொள்ளவும். சாதத்துடன் பிசைந்து சாப்பிட மணமாகவும், ருசியாகவும் இருக்கும். பசியைத் தூண்டும்.