தேவையானவை:
- தக்காளி 6,
- புளி நெல்லிக்காய் அளவு,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- சின்ன வெங்காயம் 12,
- பூண்டு (விருப்பப்பட்டால்) 4,
- உப்பு தேவையான அளவு.
தாளிக்க:
- கடுகு அரை டீஸ்பூன்,
- உளுத்தம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- எண்ணெய் 2 டேபிள்ஸ்பூன்,
- கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: வெங்காயத்தை தோல் உரித்து, தக்காளி, புளி, உப்பு, மிளகாய்தூள் சேர்த்து அரைத்துக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்த விழுதைச் சேர்த்து மிதமான தீயில் பச்சை வாசனை போக சுருள வதக்குங்கள். பயணத்துக்கு ஏற்ற சட்னி இது